MMS- ன் நோக்கங்கள்
மேலப்பாளையம் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே இந்த மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டி.
அன்பான சகோதர சகோதரிகள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக….!
மேலப்பாளையம் மக்களின் சமூக சூழல் மற்றும் பொருளாதார நிலை மாறி வரும் காலகட்டத்தில் நாளுக்கு நாள் நோய்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை பெறுவது மக்களுக்கு ஓர் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இதன் விளைவாக மக்கள் நோயுடனேயே வாழும் அவல நிலை அல்லது அதனை தவிர்க்க சாத்தியக்கூறுகள் இல்லாததால் (அகால) மரணம் ஏற்படுகிறது. எதிர்பாராத மருத்துவ செலவு இன்றைய சூழ்நிலையில் எல்லோராலும் எதிர் கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக ஏழைகளை அது சொல்ல முடியாத துயரத்திலும், கஷ்டத்திலும் ஆழ்த்துகிறது. சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நமதூரில் பொருளாதார வசதி பெற்ற அனைவருக்கும் இது போன்ற தேவையுள்ள ஏழைகளுக்கு உதவ வேண்டிய தார்மீக பொறுப்புள்ளது. இந்த பொறுப்பை நன்குணர்ந்த பல நல்லுள்ளங்கள், பல்வேறு நற்பணிக் குழுக்கள் மற்றும் நல அமைப்பு ஒருங்கிணைந்து ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டி.
ஏழை எளிய மக்களின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைக்கான பொருளாதார உதவிகளை செய்வதற்காக 2015 ஆம் ஆண்டு நமது ஊரில் செயல்பட்டு வரக்கூடிய நற்பணிக் குழுக்கள் மற்றும் நல அமைப்பு இணைந்து மேலப்பாளையம் பைத்துல்மால் யூனிட்டி (MPMBU) என்னும் குழுமம் உருவாக்கப்பட்டது.
MPMBU-ன் வெளிப்பாடாக நமதூரில் மக்களுக்கு நிரந்தர தீர்வாக மேலப்பாளையத்தில் ஓர் உயிர்காக்கும் மருத்துவமனையை உருவாக்கும் நோக்கத்தோடு 2017 ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டி.
சேவை அடிப்படையிலான ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த ஊர் மற்றும் சமூகத்தினுடைய பங்களிப்பும், ஒத்துழைப்பும் அவசியம். இதை நன்கு உணர்ந்து நமதூரில் பகுதிவாரியாக செயல்பட்டு வரும் நற்பணிக்குழுக்கள் மற்றும் நல அமைப்புகளை MMS உடன் இணைத்து சேவையாற்றி வருகிறோம். இந்த உயரிய சேவையில் புதிதாக உருவாக்கப்படுகின்ற நல அமைப்புகளையும் இணைக்க முயற்சி செய்து வருகின்றோம்.
மேலப்பாளையம் ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டதே இந்த மேலப்பாளையம் மெடிக்கல் சொஸைட்டி.
மேலப்பாளையம் மக்களின் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைக்காக பொருளாதார உதவிகளை செய்வதற்கு தன்னார்வ தொண்டு அமைப்புகளை ஒருங்கிணைப்பது.
உயிர்காக்கும் மருத்துவ சேவையை உள்ளடக்கிய மருத்துவமனையை உருவாக்கும் மிகப்பெரிய இத்திட்டத்தினை பல்வேறு கட்டங்களாகப் பிரித்து நடைமுறைபடுத்த இறைவன் நாடினால் திட்டமிடப்பட்டுள்ளது.
MMS-ன் செயற்குழு மற்றும் பொதுக்குழுவால், இறைவன் நாடினால் மருத்துவமனை நிர்வாகம் செய்யப்படும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய 150க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சைக்கான பொருளாதார உதவி செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் சுமார் 80 முதல் 100 பயனாளிகளுக்கு (MMS-ல் அங்கம் வகிக்கும் நல அமைப்புகள் மூலம்) மருந்து மாத்திரைகளுக்கான உதவியும், சுமார் 4 முதல் 6 பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கான பொருளாதார உதவியும் செய்யப்பட்டு வருகிறது.
மேலப்பாளையம் மக்கள் குறிப்பாக கஷ்டத்தில் வாழும் ஏழை மக்களுக்கு உதவி செய்ய ஆர்வம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ள.